தந்தையரை மேன்மைப்படுத்துவோர் நீடுவாழ்வர்: ஆண்டவருக்குப் பணிந்து நடப்போர் தங்கள் அன்னையர்க்கு மதிப்பு அளிப்பர். சீராக் 3:6

நீடிய ஆயுள் உத்தரவாதம்

 

உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி, உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட. யாத்திராகமம் 20:12

 

 எனவே அவர் தம் மகன் தோபியாவை அழைக்க, அவரும் தந்தையிடம் வந்தார். மகனுக்குத் தந்தை பின்வருமாறு அறிவுரை வழங்கினார்: என்னை நல்லடக்கம் செய்: உன் தாயை மதித்துநட. அவள் வாழ்நாள் முழுவதும் அவளைக் கைவிடாதே. அவளுக்கு விருப்பமானதைச் செய்: எவ்வகையிலும் அவளது மனத்தைப் புண்படுத்தாதே.4 மகனே, நீ அவளது வயிற்றில் இருந்தபோது உன் பொருட்டு அவள் தாங்கிய பல துன்பங்களை நினைத்துப்பார்: அவள் இறந்ததும் அவளை என் அருகில் அதே கல்லறையில் அடக்கம் செய். தோபித்து 4:3-4

 

இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், ″ அம்மா, இவரே உம் மகன் ″  என்றார். பின்னர் தம் சீடரிடம், ″ இவரே உம் தாய் ″ என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார். யோவான் 19:26-27

Write a comment

Comments: 0