யூதா வீட்டாருக்கு நான் அளிக்க எண்ணியுள்ள எல்லாத் தண்டனைகள் பற்றியும் அவர்கள் அனைவரும் கேள்வியுற நேர்ந்தால், அவரவர் தம் தீய வழிகளை விட்டுத் திரும்பக்கூடும். எரேம

எழுதப்பட்ட வார்த்தையின் நோக்கம்

யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிம் ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில் ஆண்டவரிடமிருந்து எரேமியாவுக்கு அருளப்பட்ட வாக்கு: நீ ஏட்டுச் சுருள் ஒன்றை எடுத்துக்கொள். நான் உன்னோடு பேசத் தொடங்கின நாள் முதல், அதாவது யோசியாவின் நாள்கள் தொடங்கி இந்நாள்வரை, இஸ்ரயேலைக் குறிக்கும், யூதாவைக் குறித்தும், மற்ற எல்லா நாடுகளைக் குறித்தும் நான் உனக்கு உரைத்துள்ள சொற்கள் எல்லாவற்றையும் அச்சுருளில் எழுது.  எரேமியா 36:1-2

 

யூதா வீட்டாருக்கு நான் அளிக்க எண்ணியுள்ள எல்லாத் தண்டனைகள் பற்றியும் அவர்கள் அனைவரும் கேள்வியுற நேர்ந்தால், அவரவர் தம் தீய வழிகளை விட்டுத் திரும்பக்கூடும். அப்பொழுது அவர்கள் குற்றங்களையும் பாவங்களையும் நான் மன்னிப்பேன். எரேமியா 36:3