ஆவியானவர் இயேசுவை வனாந்தரத்திற்குச் செல்ல ஏவினார்.  அங்கு அலகை இயேசுவை நாற்பது நாட்கள் சோதனைக்கு உட்படுத்தினான். லூக்கா 4:1-2

போராட்டத்தை நாளும் எதிர்கொள்வோம்

மன அமைதி, சமாதானம் என்பனவற்றை விரும்புவதில் ஒன்றும் தவறு இல்லை, என்றாலும் போர்க்களத்தில் வீரனாக நிற்பவனுக்கு அப்படியெல்லாம் அது எளிதில் வாய்த்துவிடாது. ஏனென்றால், நம் எதிரி சோர்வின்றி, நம்மை வீழ்த்த போராடிக் கொண்டிருக்கிற போது, நாமும் சோர்வின்றி அவனை எதிர் கொள்வது தவிர்க்க இயலாததாகிறது. இயேசுவும் கூட இந்தச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதை மேற்கொள்கின்ற வழியை நமக்குக் கற்றுத் தருகிறார்: யோர்தான் நதியில் இருந்து இயேசு திரும்பினார். அவர் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார். ஆவியானவர் இயேசுவை வனாந்தரத்திற்குச் செல்ல ஏவினார்.  ஆவியானவர் இயேசுவை வனாந்தரத்திற்குச் செல்ல ஏவினார்.  அங்கு அலகை  இயேசுவை நாற்பது நாட்கள் சோதனைக்கு உட்படுத்தினான். லூக்கா 4:1-2 பின்னும், அவன் அவரைச் சோதிப்பதை நிறுத்தவில்லை, ஆனால் இயேசு, இறை வார்த்தை என்ற ஆயுதத்தால் அவனை முறியடித்தார். ஜெபம் சோதனையை மேற்கொள்ள இன்னுமொரு சிறந்த வழி என்பதால் அதனையும் கற்றுக்கொடுத்தார்; எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். மத்தேயு 6:13 இந்த பூமியில் வாழ்ந்த இறுதி நாட்களின் போதும், தம் சீடர்கள் சோதனையில் வீழ்ந்து விடாதபடி ஜெபிக்க வலியுறுத்தினார்: உங்கள் மனம் ஆர்வமுடையதுதான்; ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள் ' என்றார். மத்தேயு 26:41 தொடர்ச்சியான ஜெபப் பயிற்சியாலும், தேவனின் வார்த்தையின் வல்லமையால் எதிரியை மேற்கொண்டு வெற்றி காண்போம்.

 

அப்பா, நாங்கள் எதிர் கொள்ள வேண்டிவரும் சோதனைகளைப் பற்றி எச்சரிப்பதற்காக நன்றி கூறுகின்றோம். உம் பரிசுத்த ஆவியார் தாமே உம் வார்த்தைகளைத் தந்து, எங்களை வெற்றியை நோக்கி நடத்துவாராக, இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.