கடவுளின் கருணைக் கண் யூத மூப்பர்கள் மேல் இருந்தால் இச்செய்தி தாரியுவைச் சென்றடையும்வரை அவர்களால் தடுத்து நிறுத்த இயலவில்லை. எஸ்றா 5:5

அவர் நம்மைக் கண்காணிக்கிறார்

பெற்றோர் பார்வையில் உள்ள போது, குழந்தைகள் நம்பிக்கையோடும், துணிவாகவும் விளையாடவோ, அல்லது வேறு செயல்களைச் செய்யவோ செய்கின்றனர். எவ்வளவு உயரமாய் வளர்ந்தாலும், நாமும் கொண்டு வாழ வேண்டிய அறிவு என்னவென்றால், நம் தேவன் எப்போதும் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார் என்பது தான். நம்மைப் படைத்தவரின் பார்வையில் இருப்பது எத்துணை பெரிய பாக்கியம். இதை உணர்ந்து வாழ்ந்த தாவீது, அகமகிந்து எழுதுகிறான்; “இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை; உறங்குவதும் இல்லை.”  சங்கீதம் 121:4 ஆலயத்தின் புனரமைய்ப்பு செம்மையாய் நடந்தேறியது, தேவனின் பார்வை அதன் மேல் இருந்ததாலே:  “கடவுளின் கருணைக் கண் யூத மூப்பர்கள் மேல் இருந்தால் இச்செய்தி தாரியுவைச் சென்றடையும்வரை அவர்களால் தடுத்து நிறுத்த இயலவில்லை. எனவே அவர்கள் தாரியுவுக்கு இதைப்பற்றி ஒரு மடல் அனுப்பினார்கள்.” எஸ்றா 5:5 நாமும் கூட நம் வாழ்வையும், செயல்கள் அனைத்தையுமே அவர் பார்வையில் ஒப்படைப்போம், நம் தேவன் நம்மைக் கண்காணிப்பதில் எப்போதும் மகிழ்கிறார்.

 

அப்பா, எப்போதும் எங்களைப் பாதுகாத்துப், பார்த்துக்கொண்டே இருப்பதற்காக நன்றி கூறுகிறோம். உம் பரிசுத்த ஆவியார் தாமே இந்தப் பராமரிப்பின் மேன்மையை உணரச்செய்து, இன்னும் ஆர்வமாய் உம்மைத் துதிக்கச் செய்வாராக, இயேசுவின் காக்கின்ற நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.