பாவம் உங்களது எஜமானன் அல்ல. ஏனென்றால் நீங்கள் சட்ட விதிகளின் கீழ்ப்பட்டவர்கள் அல்லர். நீங்கள் இப்போது தேவனுடைய கிருபைக்குக் கீழ்ப்பட்டவர்களே. ரோமர் 6:14

விளையாட்டைக் கற்றுக்கொண்டால் வெற்றி

நீரில் லாவகமாக சறுக்கி விளையாடுவது, ஒரு அற்புதமான விளையாட்டு. ஒரு நல்ல கலையும் கூட என்பேன். அதற்கென்று உள்ள நியமங்களைக் கற்றுக்கொண்டால் விளையாட்டை அனுபவித்து மகிழலாம். அலைகள் வேகமாக நம்மைத் தாக்க வருவது போன்று தோன்றினாலும், அதையும் நமக்கு சாதகமாக்கிக் கொள்வதே கலை. ஆவிக்குரிய வாழ்விலும் பாவம் நம்மை அலையாய் வந்து, தாக்கினாலும் நாம் செய்ய வேண்டியதை பவுல் அருமையாகக் கற்பிக்கிறான்: “பாவம் உங்களது எஜமானன் அல்ல. ஏனென்றால் நீங்கள் சட்ட விதிகளின் கீழ்ப்பட்டவர்கள் அல்லர். நீங்கள் இப்போது தேவனுடைய கிருபைக்குக் கீழ்ப்பட்டவர்களே.” (ரோமர் 6:14) கிருபை என்ற விசுவாசப் பலகையைக் கையாளக் கற்றுக்கொண்டால், ஆவிக்குரிய வாழ்வை அழகாகவும், திறமையாகவும் நடத்தி, அனுபவித்து ரசனையோடும் வாழ முடியும்.

 

அப்பா,பாவம் என்னும் அலைகள் எங்களை வீழ்த்த எழுவதை மேற்கொள்ள உணர்த்துவதற்காக நன்றி கூறுகிறோம். உம் பரிசுத்த ஆவியார் தாமே கிருபையைப் பற்றிக்கொள்ளக் கற்றுத் தந்து, பயிற்றுவிப்பராக, இயேசுவின் நல்ல நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.