நீர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் நானும் உம்மோடு வருவேன். நீர் உறங்கும் இடத்திலேயே நானும் உம்மோடு உறங்குவேன். உம் ஜனங்களே என் ஜனங்கள். உம்முடைய தேவனே என் தேவன்.

அவரோடு என்றென்றும் ஒப்பந்தத்திலிருக்கிறோம்

நமக்கு அறைகளைப் பதிவு செய்கிற போது, பதிவை உறுதிப்படுத்திக்கொள்வது எப்போதும் நல்லதே. சூழ்நிலை மாறின பின்பும் தன் உடன்படிக்கையினின்று கொஞ்சமும் பின்மாறாத ஒரு பெண் இன்று நமக்கு விசுவாசத்தில் மாதிரியாகத் தரப்படுகிறாள்: “ஆனால் ரூத், ‘உம்மைவிட்டு விலகும்படி என்னை வற்புறுத்த வேண்டாம்! என் சொந்தக்காரர்களிடம் திரும்பிப் போகுமாறு என்னைக் கட்டாயப்படுத்த வேண்டாம். என்னை உம்மோடு வரவிடும். நீர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் நானும் உம்மோடு வருவேன். நீர் உறங்கும் இடத்திலேயே நானும் உம்மோடு உறங்குவேன். உம் ஜனங்களே என் ஜனங்கள். உம்முடைய தேவனே என் தேவன்.’” (ரூத் 1:16) யோசுவாவும் இதே உறுதிப்பாடுடனே தேவனைப் பற்றிக்கொண்டு நிலைத்திருப்பதாய் அறிக்கையிட்டு, அதே மனநிலையை நாமும் பின்பற்ற நல்ல உதாரணமாய் திகழ்கிறான். “நீங்கள் கர்த்தருக்கு சேவை செய்ய விரும்பாமல் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு நீங்களே ஒன்றைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும். யாருக்கு சேவை செய்வதென்று இன்றைக்கு முடிவெடுங்கள். ஐபிராத்து நதியின் மறுகரையில் வாழ்ந்தபோது உங்கள் முற்பிதாக்கள் ஆராதித்த தெய்வங்களுக்கு சேவைபுரிவீர்களா? அல்லது இத்தேசத்தில் வாழ்ந்த எமோரியர் வழிபட்ட தேவர்களையா? நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் நானும் எனது குடும்பமும், கர்த்தருக்கே சேவை செய்வோம்!” என்றான். (யோசுவா 24:15) 

 

அப்பா, உம்மோடே எப்போதும் நிலைத்திருக்கும் தயவுக்காக நன்றி கூறுகிறோம். உம் பரிசுத்த ஆவியார் தாமே என்றும் உம்மோடு நிலைத்திருக்க எப்போதும் உதவுவாராக, இயேசுவின் நம்பிக்கையுள்ள நாமத்தில் ஜெபிக்கிறோம், ஆமென்.