கிறிஸ்துவின் மூலம் எனக்கு எல்லாவற்றையும் செய்ய வலிமை இருக்கிறது. ஏனென்றால் அவர் எனக்குப் பலத்தைக் கொடுக்கிறார். பிலிப்பியர் 4:13

எல்லையற்ற அவரது ஆற்றல்

நாம் விரும்பி வாங்கும் எல்லா வாகனங்களிலும், செல்லும் வேகம் பற்றிய ஒரு வரம்பு வரையறுத்து, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விசுவாசி என்ற நிலையில், நம் வேகத்தையும், ஆற்றலையும் எவராலுமே அளவிடமுடியாது, ஏனென்றால், நாம் நமது பலகீனங்களைச் சார்ந்து அல்ல, நம் சாதனையின் எல்லைகளை விவரிக்க இயலாத அளவு விசாலப்படுத்தி, தன் வலிமையை வழங்கி உறுதிப்படுத்தும்  தேவனை நம்பி செயலிலிறங்க வேண்டும்: "கிறிஸ்துவின் மூலம் எனக்கு எல்லாவற்றையும் செய்ய வலிமை இருக்கிறது. ஏனென்றால் அவர் எனக்குப் பலத்தைக் கொடுக்கிறார்." (பிலிப்பியர் 4:13) அன்றாடம் நம் எதிரி விடாமல் தரும் சோதனை என்னவென்றால், நம் பலகீனத்தை உணர்த்தி, நாம் இயலாது எனச் சொல்லுமளவு பயம், சந்தேகம் மற்றும் அவிசுவாசத்தால் மனதை நிரப்பவேப் பாடுபடுகிறான். ஆனால், நாமோ, பலகீனர்கள் என்பதை உணர்ந்து, பலம் தந்து உறுதிப்படுத்தும் தேவ ஆற்றலை மாத்திரம் பற்றிக் கொள்ளவேண்டும். பவுலின் வார்த்தைகள் மெல்ல நம் செவிகளில் எதிரொலித்து, நம்மை விசுவாசத்தில், அதுவும்..எதையும், எல்லாவற்றையும் நிறைவேற்றும், வீழ்த்த இயலா விசுவாசத்தால் நம்மை பெலப்படுத்தட்டும்: ஆனால் கர்த்தரோ என்னிடம், “என் கிருபை உனக்குப் போதும். நீ பலவீனப்படும்போது என் பெலன் உனக்குள் முழுமையாகும்” என்றார். எனவே நான் என் பலவீனத்தைப் பற்றி மேன்மைப்படுத்தி பேசுவதில் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கியிருக்கிறது. (2 கொரி 12:9) நம் கிறிஸ்தவ வாழ்வையும், சாகசங்களையும் அவரைச் சார்ந்து, அவரது வீழ்த்த இயலா வல்லமையைப் பெற்று, கட்டுவோம், எனென்றால், நம்மைத் துவளச் செய்யும் எதிரியோ எப்போதே தோற்கடிக்கப்பட்டவன்.

 

அப்பா, நினைத்துப் பார்க்க முடியாத செயல்களை நிறைவேற்ற எங்களை நியமித்து, உம் மகனின் வல்லமையால் இடைக்கட்டி அனுப்புவதற்காக நன்றி. உம் வல்லமையின் ஆவியார் தாமே, வலிமையான விசுவாசத்தில் எங்களைப் பயிற்றுவித்து, நடத்திச் செல்வாராக, இயேசுவின் அதி வல்லமையுள்ள நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.