இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை நான் பொறித்து வைத்துள்ளேன். உன் சுவர்கள் எப்பொழுதும் என் கண்முன் நிற்கின்றன. எசாயா 49:16

நினைவுகொண்டுள்ளார், நீயும் நினைவுகொள்

மின்னணு உபகரணங்களை வாங்கும் போது, அதன்நினைவாற்றலைப் பற்றி கருத்தாயுள்ளோம், ஏனென்றால் மனிதநினைவுவற்றால் வளம் குன்றி வருகிறது. நாம் காண்கிற, காணஇயலாத எல்லாவற்றையும் படைத்த நம் கடவுள், நம் எல்லோரின்பெயரையும், மற்றும் இந்தக் கணம் நாம் செய்யும் செயலையும்கூட நினைவில் கொண்டுள்ளார், அவர் எருசலேமுக்கு செய்வதுபோல: “இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை நான்பொறித்து வைத்துள்ளேன். உன் சுவர்கள் எப்பொழுதும் என்கண்முன் நிற்கின்றன.” (எசாயா 49:16) ஆதாமின்வழித்தோன்றல் என்ற நிலையில், நமக்கும் நினைவாற்றல்மிகுதியாக உண்டு. அவன் எல்லா உயிரினங்களுக்கும், பெயர்குறைவின்றி, தனித்தனியே, தவறின்றி பெயர் வைத்தான். அலகை, விலக்கப்பட்ட கனியைப் புசிக்க, அவன் மனைவியைத்தூண்டி, அவனையும் ஏற்கச்செய்த போதே, கணப்பொழுது மறதி, அதுவும் கடவுளின் எச்சரிக்கை, மற்றும் கட்டளைகளை மறந்து போகச்செய்தது .  தொடந்து அது ஒரு வியாதி போல அவன்சந்நிதியிலும் தொடர்ந்தது, கடவுளின் அன்புக் கட்டளைகளைமறக்கச் செய்கிறது. தன் கைப்படக் கற்பலகைகளில் கடவுள்கட்டளைகளை பொறித்துத் தந்த பின்பும், மக்கள் மறந்ததால், அவர் இம்முறை மக்களின் இதயத்தில் அவற்றைப் பொறிக்கிறார்: “அந்நாள்களுக்குப் பிறகு, இஸ்ரயேல் வீட்டாரோடு நான்செய்யவிருக்கும் உடன்படிக்கை இதுவே: என் சட்டத்தைஅவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்: அதை அவர்களது இதயத்தில்எழுதிவைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்: அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள், என்கிறார் ஆண்டவர்.”(எரேமியா 31:33) அவரது கட்டளைகளை நினைவு கொண்டு, கீழ்ப்படிதலால் நம் நன்றியுணர்வை வெளிப்படுத்துவோம், அப்போது நம் நினைவாற்றலும் பெருகும்.

 

அப்பா, எங்கள் பெயரையும், இந்தக்கணமும் நாங்கள் செய்யும்அனைத்தையுமே நினைவில் கொள்வதற்காக நன்றி. உம்ஆவியார் தாமே, அவரின் கட்டளைகளை ஆர்வமாய் நாடச் செய்து,  கீழ்ப்படிதலால் நினைவாற்றலிலும் வளர உதவுவாராக. இயேசுவின் கீழ்ப்படிதல் நிறை நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.