நன்றி நிறைந்த பாடல்களோடு அவரது நகரத்தினுள் நுழையுங்கள். துதிப் பாடல்களோடு அவரது ஆலயத்திற்குள் வாருங்கள். அவரைப் பெருமைப்படுத்தி, அவர் நாமத்தைத் துதியுங்கள். சங்

வாயில் அருகேயேக் காத்திருப்போம்

மறு பயணத்துக்கு நிறைய நேரம் இருக்கும்போது, இடைத்தங்கல் நிலையிலுள்ள பயணிகள் தூங்கி ஓய்வெடுக்க விரும்புவர், என்றாலும் அடுத்து பயணம் மேற்கொள்ள வேண்டிய கதவண்டே இருப்பது எப்போதும் நல்லது. ஒருவேளை அவர்கள் தூங்கினாலும், விமான பணியாட்களில், ஒருவராவது அவர்கள் பெயரைக் கூப்பிட்டு, எழுப்பி அழைத்துச் செல்வர், ஏனென்றால், அவர்களின் பயணப் பொதிகள், அவர்கள் செல்ல வேண்டிய விமானத்தில் ஏற்கெனவே ஏற்றப்பட்டிருக்கும். ஆவிக்குரிய விசுவாசப் பயணத்தில் இருக்கும், நாமும் செய்ய வேண்டியதை தாவீதும் கற்றுத்தருகிறான்: “நன்றி நிறைந்த பாடல்களோடு அவரது நகரத்தினுள் நுழையுங்கள். துதிப் பாடல்களோடு அவரது ஆலயத்திற்குள் வாருங்கள். அவரைப் பெருமைப்படுத்தி, அவர் நாமத்தைத் துதியுங்கள்.” (சங்கீதம் 100:4) நானே வாயில் என, தன்னை அடையாளப்படுத்திய நம் மீட்பராம், நல்ல மேய்ப்பரின் அருகேயே, அமர்ந்து, அவர் நாமத்துக்கு உகந்த துதி, கன , மகிமையோடு நன்றிப் பாடல்கள் பாடி மகிழ்வோம், ஏனென்றால், அவர் நாமம் விண்ணிலும், மண்ணிலும், கீழுலகின்  எல்லா இடங்களிலுமே, எல்லையின்றி எப்போதும் ஆராதிக்கப்படவும், துதிக்கப்படவும் வேண்டும். தவறாமல் வாயிலாம் நம் மேய்ப்பரண்டையில் அமர்ந்து அவர் நாமத்தை எப்போதும் மறவாமல் துதிப்போம்.

 

அப்பா, தன்னை வாயில் என்று சொன்ன எங்கள் நல்ல மேய்ப்பரின் அருகே அமர்ந்திருக்க அறிவுறுத்துவதற்காக நன்றி. உம் ஆவியார் தாமே என்றுமே நன்றியோடும், பாடலோடும்  அவர் நாமத்தைப் பெருமைப்படுத்த எப்போதும்  கற்றுத்தந்து, கரம் பிடித்து நடத்துவாராக. இயேசுவின் அதிசய நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.