ஆட்டுக்கடாக்களைப்போல் மலைகள் நடனமாடின. சங்கீதம் 114:4-7

நாமும் வரவேற்க ஆயத்தமாவோமா!

படைப்பு எல்லாமே இறைவனால் உருவாக்கப்பட்டது, மனிதன் என்றஅவர் சாயலைப் பகிந்து பெற்றுக் கொண்ட, உயந்த படைப்புபொறுப்புடன் அவர் சார்பில், ஆண்டு நடத்துவதற்காக. பாவத்தால் அலகையிடம் இழந்த பொறுப்பை, அவர் மகனை அனுப்பி, அவர்பாடுகளால் மீட்டுத்த்தந்தார். இன்றோ ஒரு சிலரின் அதீத சுயநலத்தால்,இயற்கையும் மற்றும் ஏழைகளும், துன்புறுத்தப்படுவதால், அவர் மகன்சொன்னபடி மீண்டும் வல்லமையோடு வரும்போது, ஏழைகளின்கண்ணீரும், இயற்கை அவலங்களும் ஒருசேரத் துடைக்கப்படும். அந்தநாளில்: சங்கீதம் 114:4-7 

 

4 ஆட்டுக்கடாக்களைப்போல் மலைகள் நடனமாடின.

    ஆட்டுக்குட்டிகளைப் போல் மலைகள் நடனமாடின.

5 செங்கடலே, நீ ஏன் ஓடிப்போனாய்?

    யோர்தான் நதியே, நீ ஏன் திரும்பி ஓடிப் போனாய்?

6 மலைகளே, நீங்கள் ஏன் ஆட்டுக் கடாக்களைப்போல்நடனமாடினீர்கள்?

    மலைகளே, நீங்களும் ஏன் ஆட்டுக் குட்டிகளைப்போல்நடனமாடினீர்கள்?

7 யாக்கோபின் தேவனும் கர்த்தருமாகிய ஆண்டவருக்கு முன்னே

    பூமி நடுங்கி அதிர்ந்தது. என்ற படி, மகிழ்ந்து அக்களித்து வரவேற்கும்,நாமும் வரவேற்க ஆயத்தமாவோமா!

 

அப்பா, உம் மகனின் இரண்டாம் வருகைக்கு நன்றி. உம் ஆவியார்எங்களை ஆயத்தப்படுத்துவாராக, இயேசுவின் வல்லமை நிறைநாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.