பிரசங்கி 3 :2-8 எல்லாவற்றுக்கும் ஒரு சரியான காலம் உண்டு. பூமியில் உள்ள ஒவ்வொன்றுக்கும் ஒரு சரியான காலமுண்டு.

சரியான காலம் இப்பொழுது

 

பிரசங்கி 3 

ஒரு காலம் உண்டு

3 எல்லாவற்றுக்கும் ஒரு சரியான காலம் உண்டு. பூமியில் உள்ள ஒவ்வொன்றுக்கும் ஒரு சரியான காலமுண்டு.

பிறப்பதற்கு ஒரு காலமுண்டு,

    மரிப்பதற்கு ஒரு காலமுண்டு,

நடுவதற்கு ஒரு காலமுண்டு,

    பிடுங்குவதற்கும் ஒரு காலமுண்டு.

கொல்வதற்கு ஒரு காலமுண்டு,

    குணப்படுத்தவும் ஒரு காலமுண்டு,

அழிப்பதற்கு ஒரு காலமுண்டு,

    கட்டுவதற்கும் ஒரு காலமுண்டு.

அழுவதற்கு ஒரு காலமுண்டு,

    சிரிப்பதற்கும் ஒரு காலமுண்டு,

வருத்தப்படுவதற்கு ஒரு காலமுண்டு,

    மகிழ்ச்சியால் நடனமாடுவதற்கும் ஒரு காலமுண்டு.

ஆயுதங்களை எறிவதற்கு ஒரு காலமுண்டு,

    ஆயுதங்களை எடுப்பதற்கு ஒரு காலமுண்டு. [a]

தழுவிக்கொள்ள ஒரு காலமுண்டு,

    தழுவிக்கொள்ளாமல் இருக்கவும் ஒரு காலமுண்டு.

சிலவற்றைத் தேட ஒரு காலமுண்டு,

    இழந்துவிட்டதாகக் கருதவும் ஒரு காலமுண்டு,

பொருட்களைப் பாதுகாக்க ஒரு காலமுண்டு,

    பொருட்களைத் தூக்கி எறியவும் ஒரு காலமுண்டு.

துணிகளைக் கிழிப்பதற்கு ஒரு காலமுண்டு,

    அதனைத் தைப்பதற்கும் ஒரு காலமுண்டு,

அமைதியாக இருப்பதற்கு ஒரு காலமுண்டு,

    பேசுவதற்கும் ஒரு காலமுண்டு.

அன்பு செய்ய ஒரு காலமுண்டு,

    வெறுக்கவும் ஒரு காலமுண்டு,

சண்டையிடுவதற்கு ஒரு காலமுண்டு,

    சமாதானம் கொள்வதற்கும் ஒரு காலமுண்டு.

தேவன் தன் உலகைக் கட்டுப்படுத்துகிறார்

9 ஒருவன் உண்மையில் தன் கடின உழைப்பின் மூலம் எதையாவது பெறுகிறானா? 10 தேவன் நமக்குக்கொடுத்த அனைத்து கடினவேலைகளையும் நான் பார்க்கிறேன். 11 அவரது உலகத்தைப்பற்றிச் சிந்தித்துப் பார்க்கும் திறனை தேவன் நமக்குக்கொடுத்திருக்கிறார். எனினும் தேவன் செய்யும் அனைத்தையும் நாம் முழுவதும் புரிந்துகொள்வதில்லை. ஆனால் இதுவரை தேவன் அனைத்தையும் சரியானகாலத்திலேயே செய்துவருகிறார்.

12 ஜனங்கள் வாழ்கிற காலம்வரை மகிழ்ச்சியாக இருப்பதும், சந்தோஷம் அனுபவிப்பதும் நல்ல செய்கை என்பதை நான் கற்றேன். 13 எல்லோரும் உண்ணவும் குடிக்கவும் அவரது வேலையில் மகிழ்ச்சியடையவும் வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இவைதேவனிடமிருந்து வரும் அன்பளிப்புகள்.

14 தேவன் செய்வது என்றென்றும் தொடரும் என்பதை அறிந்தேன். தேவனுடைய கிரியையோடு ஜனங்கள் எதையும் சேர்த்துக்கொள்ளமுடியாது. தேவனுடைய கிரியையிலிருந்து ஜனங்கள் எதையும் எடுத்துக்கொள்ளவும் முடியாது. தேவன் இதனைச் செய்கிறார். எனவேதேவனுக்கு ஜனங்கள் மரியாதை செலுத்தவேண்டும். 15 ஏற்கெனவே நடந்து முடிந்தவை முடிந்தவையே. அவற்றை நாம் மாற்ற முடியாது. எதிர்காலத்தில் நடப்பவை நடந்தே தீரும். நாம் அவற்றையும் மாற்ற முடியாது. ஆனால் தேவன், மிகமோசமாக நடத்தப்படுபவர்களுக்குஉதவி செய்ய விரும்புகிறார். 

 

 

 

மரியாள் தேவனைப் போற்றுதல்

46 அப்போது மரியாள்,

47 

“எனது ஆத்துமா கர்த்தரைப் போற்றுகிறது.

    தேவன் எனது இரட்சகர். எனவே என் உள்ளம் அவரில் மகிழ்கிறது.

48 

நான் முக்கியமற்றவள்,

    ஆனால் தேவன் தனது கருணையைப் பணிப்பெண்ணாகிய எனக்குக் காட்டினார்.

இப்போது தொடங்கி,

    எல்லா மக்களும் என்னை ஆசீர்வதிக்கப்பட்டவள் என்பர்.

49 

ஏனெனில் ஆற்றல் மிகுந்தவர் எனக்காக மேன்மையான செயல்களைச் செய்தார்.

    அவர் பெயர் மிகத் தூய்மையானது.

50 

தேவனை வணங்கும் மக்களுக்கு அவர் எப்போதும் இரக்கம் செய்வார்.

51 

தேவனின் கைகள் பலமானவை.

    செருக்குற்ற மனிதர்களையும் சுயதம்பட்டக்காரர்களையும் அவர் சிதறடிக்கிறார்.

52 

சிம்மாசனத்தினின்று மன்னர்களைக் கீழே இறக்குகிறார்.

    தாழ்ந்தவர்களை உயர்த்துகிறார்.

53 

நல்ல பொருட்களால் பசித்த மக்களை நிரப்புகிறார்.

    செல்வந்தரையும், தன்னலம் மிகுந்தோரையும் எதுவுமின்றி அனுப்பிவிடுகிறார்.

54 

தனக்குப் பணிசெய்வோருக்கு அவர் உதவினார்.

    அவர்களுக்குத் தன் இரக்கத்தை அருளினார்.

55 

நம் முன்னோருக்கும் ஆபிரகாமுக்கும் தம் குழந்தைகளுக்கும் அவர் கொடுத்த வாக்குறுதியை என்றைக்கும் நிறைவேற்றுகிறார்”

என்று சொன்னாள்.

56 மரியாள் எலிசபெத்துடன் ஏறக்குறைய மூன்று மாதகாலம்வரைக்கும் தங்கி இருந்தாள். பின்பு மரியாள் தனது வீட்டுக்குச் சென்றாள். லூக்கா 1:46-56

 

 

லூக்கா 12:54-56 காலத்தை அறியுங்கள்

54 பின்பு இயேசு மக்களை நோக்கி, “மேற்கில் மேகங்கள் பெருகுகையில் நீங்கள் ‘மழைக்குரிய புயல் வந்து கொண்டிருக்கிறது’ என்றுஉடனே சொல்கிறீர்கள். உடனே மழை பொழிய ஆரம்பிக்கிறது. 55 தெற்கிலிருந்து காற்று வீசுவதை உணர்ந்ததும் நீங்கள், ‘இன்றுவெப்பமான நாள்’ என்று சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வது சரியானதே. 56 வேஷதாரிகளே! காலத்தைப் புரிந்து பூமி மற்றும் வானத்தின்மாற்றங்களுக்குப் பொருள் உரைக்கிறீர்கள். இப்போது நடந்துகொண்டிருப்பவற்றை ஏன் உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை?” என்றார்.

 

 

மாற்கு 1:15 15 “சரியான நேரம் இங்கே இப்பொழுது இருக்கிறது. தேவனுடைய இராஜ்யம் நெருங்கிவிட்டது. உங்கள் மனதையும்வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ளுங்கள். நற்செய்தி மீது நம்பிக்கை வையுங்கள்” என்று இயேசு சொன்னார்.